இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் நவராத்திரி விழா என்பதை மிக முக்கியமானதாக உள்ளது. இந்த வருடம் அக்டோபர் 15 ஆம் தேதி நவராத்திரி தொடங்கும் நிலையில் நவராத்திரியை ஒன்பது நாட்களில் துர்க்கை தேவியின் வெவ்வேறு வடிவங்கள் வைத்து வழிபடுகின்றோம். நவராத்திரியின் போது கிராம்புக்கு சில பரிகாரங்கள் செய்தால் அம்பிகை மகிழ்ச்சி அடைவது மட்டுமல்லாமல் செழிப்புடன் அதிர்ஷ்டத்தையும் நமக்கு அள்ளித் தருகின்றாள். ஒரு ஜோடி கிராம்பு துர்கா தேவிக்கு மிகவும் பிரியமானதாக உள்ளது. நவராத்திரியின் போது துர்கா தேவியை வழிபடும் போது கிராம்புகளால் அர்ச்சனை செய்தால் அது மிகவும் சிறப்பு.

நவராத்திரியின் போது ஒரு ஜோடி கிராம்புகளை எடுத்து 9 நாட்களுக்கு உங்கள் தலையில் ஏழு முறை வைத்து பிறகு துர்கா தேவியின் பாதத்தில் சமர்ப்பித்தால் அனைத்து வேலை பிரச்சனைகளும் தீரும்.

பணம் நெருக்கடியால் சிரமப்படுபவர்கள் ஒரு ஜோடி கிராம்புகளை மஞ்சள் துணியில் வைத்து ஏலக்காய் சேர்த்து ஐந்து வெற்றிலையை மஞ்சள் துணியில் வைத்து கட்டி துர்கா தேவியின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்தால் உங்களது நிதி நெருக்கடி உள்ளிட்டு அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

நவராத்திரியின் ஒன்பது நாட்களுக்கு தினமும் உங்களது வீடு முழுவதும் கற்பூரம் மற்றும் கிராம்புகளின் புகையை காட்டினால் அது வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை அகற்றி நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும்.