நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களும் கிடைக்கும். முதலில் விஜயதசமி அன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து பெருமாளை எழுந்தருள செய்து பூஜை நடத்தும்போது அந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகும்.

நவராத்திரியின் போது வீட்டில் கொலு வைத்தால் அம்பிகை நம் வீட்டில் எழுந்தருளி விட்டால் என்பது நம்பிக்கையாகும். நவராத்திரியின் போது பகலில் சிவபூஜையும் இரவில் நம்பிக்கை பூஜையும் செய்ய வேண்டும்.

நவராத்திரி ஒன்பது நாட்களும் தினம் தோறும் பகலில் 1008 சிவ நாமங்களை ஜெபித்து வழிபட்டால் அளவுக்கு அதிகமாக பலன்கள் கிடைக்கும். நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவை பயன்படுத்தி தான் கோலம் போட வேண்டும். நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனம் மகிழ்ந்து வருவாள் என்பது ஐதீகம். மேலும் நவராத்திரி ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை தோரணம் கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.