நவராத்திரியின் ஒன்பது நாட்களில் தேவியின் ஒன்பது வெவ்வேறு வடிவங்கள் வைத்து வழிபடுகின்றோம். இதனை செய்யும் போது வாஸ்து தொடர்பான சில விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

அதாவது நவராத்திரியின் போது துர்கா தேவியை மகிழ்விப்பதற்கு பூஜை சடங்குகள் என அனைத்தும் முக்கியம். வாஸ்து தோஷமும் பேபிக்கு அதிருப்தி தருவதால் அதையும் அலட்சியம் செய்யக்கூடாது.

நவராத்திரியின் போது வீட்டின் பிரதான கதவில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஸ்வஸ்திகா சின்னத்தை வைக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

நவராத்திரியின் போது துர்கா தேவியின் சிலையை வடகிழக்கு திசையில் வைப்பது நல்லது. அப்படி முடியாவிட்டால் சிலையை வடக்கு அல்லது மேற்கு திசையில் வைத்து வழிபடலாம். ஆனால் அம்மன் சிலையை தெற்கு திசையில் மட்டும் வைக்கக்கூடாது.

நவராத்திரியின் போது வடகிழக்கு மூலையில் குலதெய்வ சிலையுடன் சுத்தமான நீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தை கட்டாயம் வைக்க வேண்டும்.

நவராத்திரியின் போது துர்கா தேவிக்கு சிவப்பு மலர்கள் மற்றும் ஆபரணங்கள் அனைத்தையும் அர்ப்பணிக்க வேண்டும். பூஜையின் போது கருப்பு நிறத்தை பயன்படுத்தக் கூடாது.

துர்கா தேவியை வணங்கும்போது துர்கா தேவியின் முகம் எப்போதும் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி தான் இருக்க வேண்டும்.

நவராத்திரியின் போது தொடர்ந்து தீபம் ஏற்றினால் அதற்கு நெய் அல்லது எள் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.

நவராத்திரியின் போது அகண்ட தீபம் தென்கிழக்கு மூலையில் வைக்க வேண்டும். இந்த திசையில் தீபம் ஏற்றினால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.

நவராத்திரியின் ஒன்பது நாட்களில் வீட்டில் உள்ள சூழ்நிலையை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும். அதேசமயம் வீட்டில் எந்த மூலையிலும் அசுத்தமாக இருக்கக் கூடாது