இந்த ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி ஹோலி பண்டிகை அனைத்து  இடங்களிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பெயர் வெளியிட விரும்பாத பிரபல நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் இணைய பக்கத்தில் ஸ்கிரீன் ஷாட் ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்தப் பதிவில், ஹோலி பண்டிகைக்கு தனது மேலதிகாரி விடுப்பு வழங்க மறுத்துவிட்டதாகவும், பண்டிகை அனைத்து இடங்களிலும் கொண்டாடப்படும் போதும் நிறுவனம் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க அனுமதிப்பதில்லை.

ஹோலி பண்டிகையின் போது ஊழியர்கள் தகுந்த ஒப்புதல் கடிதம் இல்லாமல் விடுப்புகள் எடுத்தால், அதனை அங்கீகரிக்க முடியாது எனவும், மேலும் ஹோலி தினத்தன்று அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் உடலில் நிறங்கள் இருந்தால் அவர்களுக்கு அலுவலகத்திற்கு உள்ளே நுழைய கிடையாது எனவும் கண்டிப்புடன் தெரிவித்து இருந்தனர். இதனால் சம்பளம் பிடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தனது நிறுவனத்தில் “சாண்ட்விச் சம்பள குறைப்பு” கொள்கையை பின்பற்றுவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்தார். அதாவது ஒரு ஊழியர் வார இறுதி அல்லது பொது விடுமுறைக்கு முன் அல்லது பின் விடுப்பு எடுத்தால் அவர்களது சம்பளத்திலிருந்து கழிக்கலாம். அங்கீகரிக்கப்படாத விடுப்பு எடுக்கும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அல்லது பிற ஒழுங்கு நடவடிக்கைகள் நிறுவனம் மேற்கொள்ளும் இதுவே சாண்ட்விச் சம்பள குறைப்பு என தெரிவித்திருந்தார்.