தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் தேசாய் பேட்டையில் கங்காரம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பாம்பு பிடித்து குடும்பம் நடத்தி வருகின்றார். இந்நிலையில் வாட்ஸ்அப் குழு மற்றும் சமூகவலை தளத்தில் பதிவு செய்ய சுமார் 6 அடி நீளமுள்ள பாம்பை தனது மகன் சிவராஜிடம் கொடுத்துள்ளார். பின்னர் வீடியோ எடுப்பதாக கூறி பாம்பை வாயில் வைக்கும் படி தனது மகனிடம் கங்காராம் கூறியுள்ளார்.

அதன்படி சிவராஜும் வாயில் வைத்துள்ளார். உடனே பாம்பு அவரை நாக்கில் கடித்துள்ளது. இதனையடுத்து விஷம் தலைக்கு ஏறியதால் சிவராஜ் சிறுது நேரத்திலேயே உயிரிழந்து விட்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் பாம்பை வாயில் வைத்து வீடியோ எடுக்க செய்த கங்காராமை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“>