
இந்தி திரை உலகின் நடிகையும், ஃபேஷன் மாடல் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் ஸ்மிருதி இராணி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் சிறந்த உறுப்பினர்.
கடந்த 2003 ஆம் ஆண்டு பாஜக கட்சியில் இணைந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக களம் இறக்கப்பட்டவர். அந்தத் தேர்தலில் தோல்வியை தழுவி இருந்தாலும், பாஜக அவரை அமைச்சராக்கி அமேதி தொகுதியில் தொடர்ந்து பணியாற்ற வைத்தது.
பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் அதே அமேதி தொகுதியில் பெரும் வெற்றியை பெற்றார். அங்கேயே சொந்த வீடும் வாங்கி வசித்து வந்தார்.
அதன் பின்னர் கடந்த 2024 ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்மிருதி இராணி தோல்வியை தழுவினார். அதன் பின் மும்பையிலேயே தங்கிவிட்டார். தற்போது அவர் பழையபடி நடிக்கவும் தயாராகி வருகிறார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர், “ராகுலை வெல்வதற்காக பாஜக சொல்லி கொஞ்ச காலம் உள்ளூரில் வேஷம் போட்டு கொண்டிருந்தார் இராணி. இப்போ பழையபடி தொலைக்காட்சிகளுக்கே வேஷம் போட போய்விட்டார்” என விமர்சித்து வருகின்றனர்.