
பசு காவலர்களால் கொல்லப்பட்ட தனது மகன் ஆர்யன் மிஸ்ராவின் (19) கொலை தொடர்பாக, அவரது தந்தை சியாநந்த் மிஸ்ரா கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார். “மனிதர்களை கொல்ல பசு காவலர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாததால் மிகவும் வேதனை அடைந்துள்ள சியாநந்த் மிஸ்ரா, இரண்டு மாதங்களுக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றால் தானும் தனது மனைவியும் தற்கொலை செய்து கொள்வதாக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 24 ஆம் தேதி பசு காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆர்யன் மிஸ்ராவின் கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.