
புதிய வாகனங்களுக்கான பதிவு சான்று மற்றும் கனரக வாகனங்களுக்கு வழங்கப்படும் தகுதி சான்று போன்றவற்றிற்கு வாகனத்தின் உரிமையாளர் அந்தந்த மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சென்று நேரில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சான்றிதழ் இரண்டு நாட்களுக்குள் வந்து பெறாவிட்டால் தபால் மூலமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. வாகன உரிமையாளர்களில் பெரும்பாலானவர்கள் ஓட்டுனராக இருக்கிறார்கள். அதனால் தினசரி வேலையில் ஈடுபட வேண்டி உள்ளது.
இத்தகைய சூழலில் அவர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு சென்று சான்றிதழை பெற்று செல்வது இயலாத காரியம். அதனால் பதிவு மற்றும் தகுதி சான்றிதழை அங்கீகார கடிதத்தின் அடிப்படையில் வழங்க வேண்டும் என்றும் பி. ரிஜிஸ்டர் நடைமுறையில் புதிய வாகனங்களுக்கு அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.