இந்திய திரைப்பட பாடல்களின் பிரபல பாடகரும் இசையமைப்பாளரும் சங்கர் மகாதேவன் ஆவார். இவர் தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் உள்ள பாடல்களைப் பாடியும் பாலிவுட் திரைப்படங்களில் உள்ள பாடல்களுக்கு இசையமைத்தும் வருகின்றார். இவர் மும்பையில் 1967 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி தமிழ் பேசும் கேரள பிராமண குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவர் இளமையிலேயே கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசையில் பயின்றதோடு வீணை வாசிப்பதில் வல்லவரானார். காலே காகா என்று அழைக்கப்பட்ட சீனிவாச காலேயிடம் முழுமையான இசையை கற்றுத் தேர்ந்தார் .
மேலும் செம்பூரில் உள்ள லேடி ஆஃப் பெர்பெட்சுவல் சக்கர் என்ற பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தும் சயான் தென்னிந்திய கல்வி சமூகத்தில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தும் பட்டம் பெற்றார். அதன் பிறகு 1988 ஆம் ஆண்டு ராமாராவ் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் கணினி பொறியியலில் பட்டம் பெற்றார். ஒரு மென்பொருள் பொறியாளராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். அதன்பின் சங்கர் மகாதேவன் விரைவிலேயே இசைத்துறையில் தடம் பதித்தார்.
இதில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்திற்காக அவர் பாடிய பாடலுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதனை அடுத்த 1998 ஆம் ஆண்டு இவருடைய முதல் இசை தொகுப்பில் ப்ரீத் லெஸ் பாடல் இவரை பிரபலமாக்கியது. இந்த பாடல் தொகுப்பில் பாடலின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை மூச்சு விடாமல் பாட வேண்டும் என்பதாகும். அதன்பின் இவர் இந்தி திரை பட பாடல்களுக்கும் இசையமைக்க தொடங்கியுள்ளார். மேலும் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பாடல்களை பாடி பிரபலமாகியுள்ளார்.