
அமெரிக்காவில் ஜார்ஜ் கொன்சலஸ்(37) என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சிலர் நாட்களுக்கு முன்பாக சுரங்கப்பாதை ரயிலில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் ஜார்ஜ் கொன்சலஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் மதுப்பழக்கம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் இறந்த பிறகு பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் விசாரணையை தீவிர படுத்தினர்.
அதன்படி மன்ஹாட்டன் பகுதியில் உள்ள சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஜார்ஜ் அமர்ந்திருக்கும் ரயில் பெட்டியில் சந்தேகத்திற்கு இடமான ஆண் ஒருவர் ரயிலில் ஏறி உள்ளார்.
பின்னர் 3 மணி நேரம் கழித்து ரயிலை விட்டு இறங்கிய காட்சிகளும் கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபரை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் புரூக்ளினை சேர்ந்த 44 வயதான பெலிக்ஸ் ரோஹாஸ் என்பவரை இரண்டு தினங்களுக்கு முன்பு அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதைதொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.