
பாலியல் பலாத்காரம், ஆசிட் வீச்சுக்கு ஆளானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மறுக்க முடியாது என்றும் கூறியுள்ளது. 16 வயது சிறுமியை அவரது தந்தை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று பல உத்தரவுகளைப் பிரிப்பித்தது. அதில் பாலியல் வன்கொடுமை மற்றும் ஆசிட் வீச்சுக்கு ஆளாகியவர்கள் இலவச சிகிச்சை பெறுவதில் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் ஆகியவை பாதிக்கப்பட்டவர்களுக்கு, உயிர் பிழைத்தவர்களுக்கு தேவையான சிகிச்சையை மறுக்க முடியாது என்று தெரிவித்தது. அதோடு அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை வழங்காதது கிரிமினல் குற்றம் என்றும், டாக்டர்கள், நிர்வாகம், அதிகாரிகள், செவிலியர்கள், துணை மருத்துவ பணியாளர்களுக்கு இது குறித்து தெரிவிக்கப்படும். இவர்களுக்கு தேவையான பரிசோதனைகள், நோய் அறிதல்கள் மற்றும் நீண்ட கால மருத்துவ பராமரிப்புக்கும் நீடிக்கப்படுகிறது. அதோடு இவர்களுக்கு தேவையான உடல் மற்றும் மனநல ஆலோசனைகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.