அமைச்சர் செந்தில் பாலாஜி பிணை மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை வழக்கில் இந்த ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தான் விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று நீதிபதி அல்லி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்பொழுது உடல்நலையை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும்,  ஏற்கனவே 70-க்கும் மேற்பட்ட நாட்களாக காவலில் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

விரிவான பதில்களை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என அமலாக்க துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இருதரப்பு கோரிக்கையையும் ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கு குறித்து ஒரு வெள்ளிக்கிழமை பதிலளிக்க உத்தரவிட்டு… வழக்கு விசாரணையை 15 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது பதில் மனு தாக்கல் செய்யப்படும். அமலாக்க துறை மற்றும் செந்தில் பாலாஜி தரப்பில் விரிவான வாதங்களும் முன் வைக்கப்படும். அதன் பிறகு அன்றைய தினமே செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது உத்தரவு பிறப்பிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.