உகாண்டா நாட்டில் ரெபேக்கா செப்டேகி என்ற ஓட்டுப்பந்தய வீராங்கனை வசித்து வருகிறார். இவர் கடைசியாக பாரீஸில் நடந்த ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு மாரத்தான் பிரிவில் 44-வது இடத்தை பிடித்தார். அதன் பின்பு வீடு திரும்பிய அவர், கென்யா நாட்டில் மேற்கு டிரான்ஸ் நோசியா மாகாணத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் தங்கி இருந்தார். அப்போது இவருக்கும், இவரது காதலனான டானியலுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ரெபேக்கா மீது டேனியல் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் 75% தீக்காயங்களுடன் ரெபேக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு டேனியலுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.