
இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் வெளியாகிய பதான் திரைப்படத்தின் வெற்றியால் உற்சாகமாகவுள்ளார். இப்போது அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இதனிடையே ஷாருக்கானை பார்க்க மும்பையிலுள்ள அவரது வீட்டின் முன் தினசரி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரள்வார்கள்.
அப்போது வீட்டின் மாடியில் நின்று ரசிகர்களை பார்த்து ஷாருக்கான் கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும் வழக்கமான ஒன்று. இந்நிலையில் ஷாருக்கான் ரசிகர் ஒருவரிடம் கோபமாக நடந்துக்கொண்டது பரபரப்பாகி இருக்கிறது. மும்பை விமானம் நிலையத்தில் ஷாருக்கான் வந்துகொண்டிருந்தபோது ஒரு ரசிகர் ஷாருக்கான் அருகே சென்று செல்பி எடுக்க முயற்சி செய்தார்.
இதன் காரணமாக கடுப்பான ஷாருக்கான் அந்த செல்போனை ரசிகர் கையில் இருந்து தட்டிவிட்டார். இதனால் செல்போன் கீழே விழுந்து விட்டது. மேலும் அந்த ரசிகரை முறைத்தவாறு ஷாருக்கான் அங்கிருந்து நகர்ந்து சென்றார். இந்த வீடியோவானது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களிடம் அன்பாக நடந்துக்கொள்ளும் ஷாருக்கானா இப்படி செய்தார்? என பலரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
View this post on Instagram