
நாடாளுமன்ற மக்களவையில் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று உத்தவ் சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது பாகிஸ்தானில் சிறுபான்மையினர் சந்திக்கும் இன்னல்களை இந்தியா கவனித்து வருகிறது. ஆனால் அவர்கள் மீது பாகிஸ்தான் அரசு கொண்டுள்ள மதவெறி மனநிலையை இந்திய அரசால் மாற்ற முடியாது என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தானில் சீக்கிய சம்பவத்தினருக்கு எதிராக 3 அத்துமீறல்கள் நடந்தது. அதில் முதல் சம்பவத்தில் ஒரு சீக்கிய குடும்பம் தாக்கப்பட்டதாதவும், அடுத்து ஒரு பழைய குரூத்வாராவை ஒரு குடும்பம் திறந்த நிலையில் அதற்காக அச்சுறுத்தப்பட்டதாகவும், அதோடு ஒரு சீக்கிய சமூகத்தை சேர்ந்த பெண்ணை கடத்தி கட்டாயப்படுத்தி மதம் மாற்றியது போன்ற சம்பவங்கள் நடந்தது.
இதைத்தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக கடந்த மாதம் மட்டுமே இந்துக்கள் மீது கிட்டத்தட்ட 10 சம்பவங்கள் அரங்கேறி உள்ளது. அதில் 7 சம்பவங்கள் கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றம் என்று கூறப்படுகிறது. 2 சம்பவங்கள் கடத்தல் தொடர்பானவை என்றும், அதோடு ஹோலி கொண்டாட்டத்தில் மாணவர்கள் விளையாடியதினால் அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதிலிருந்து பாகிஸ்தான் அரசு தன்னுடைய நாட்டில் வசிக்கும் சிறுபான்மையின மக்களை பாதுகாக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது என்று அவர் பதில் அளித்தார்.