செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழகத்தில் குறிப்பாக  தென் தமிழகத்தில் தூத்துக்குடி,   திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட  தென்  மாவட்டங்களில் அண்மைக்காலமாக  வன்முறை சம்பவங்கள் மிகவும் அதிகரித்து வருகின்றன. இது பெரும்பாலும் சாதியே  ஒடுக்கு முறை சம்பவங்களாகவே இருக்கின்றன.  இது  இருதரப்பு மோதல் என்ற  நிலை இல்லை. ஒரு  தரப்பினர்  மட்டுமே இன்னொரு சாதாரண ஏழை – எளிய மக்கள்  மீது  ஏவப்படக்கூடிய  வன்முறையாக  இருக்கிறது.

1990 – 2000 தில் இதுபோன்று  இருதரப்பினருக்கும்  மிகப்பெரிய  அளவுக்கு இரு தரப்பினருக்கும் மோதலாக  இருந்தது. இங்கே  நூறு  பேர்  திரண்டு ஒரு  கிராமத்தை  தாக்கினால், அடுத்த  கிராமத்தில்  இருக்கக்கூடியவர் நூறு பேர்  திரண்டு  தாக்கக்கூடிய சம்பவமாக இருந்தது.  இதெல்லாம் ஒட்டுமொத்தத்தில்  தென் தமிழகத்திற்கு  பொதுவெளியில்  ஒரு  அவப்பெயரையும் ,  சாதாரண  ஏழை  எளிய  மக்களுக்கு  அச்சத்தையும்  உருவாகக்கூடிய நிலைகள் ஆகும்.

குறிப்பாக  இப்பொழுது இளைஞர்கள் பள்ளி  மாணவர்களே இந்த செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று செய்திகள் வருகின்றன.  நாங்குநேரியில்  ஒரு  செய்தியாளர்… அவர் பெயர் வானவாமலை என்ற செய்தியாளர். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான்குநேரில் நடந்த அந்த ”சின்னத்திரை” என்ற  மாணவர் மீதான  தாக்குதலை  உண்மை சம்பவத்தை வெளியே கொணர்ந்தார்.

இதற்கு அவர் அந்த பகுதியில் இருக்கக்கூடிய பெரும்பான்மை   சமுதாயத்தினுடையவர்.  அவர் எதார்த்தமாகவும்,  உண்மையாகவும்  செய்தியை  வெளியிட்டார் என்பதற்காக… அவர்  அலுவலகம் மீது பிளஸ் டூ படிக்கக்கூடிய  மாணவனே இரண்டு வெடிகுண்டுகளை  வீசினார்  என்ற செய்திகள் வருகின்றன.  அதேபோல நெல்லையில் வயல் தெரு  என்ற  பகுதியில கொலை முயற்சி நடந்திருக்கிறது. ஒட்டு மொத்தத்தில்  இது  ஏதோ  ஒரு ஆபத்தான  சூழ்நிலை  நோக்கி போய்க்கொண்டிருக்கிறது  என்று  தெரிகிறது .