ஆந்திர பிரதேஷ் மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் செல்லும் வழியில் இன்டர்நேஷனல் வெல்ஃபேர் மண்டபத்தின் அருகே மின் கம்பி ஒன்று அறுந்து தொங்கியுள்ளது.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக மின் கம்பியின் மீது மாணவர்களின் சைக்கிள் பட்டு மின்சாரம் தாக்கியது. இதில் பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த நிலையில் எட்டாம் வகுப்பு மாணவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.