அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் கடந்த கால அதிமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவச மடிக்கணினி வழங்குவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்து மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.

அதில் இலவச லேப்டாப் வழங்க இருப்பதாக இணையதளத்தில் பரவி வரும் செய்தி பொய்யானது என்று தெரிவித்துள்ளது. இது முற்றிலும் தவறானது. பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்துகிறோம். இதை நம்பி பள்ளி மாணவர்களோ, பெற்றோர்களோ தங்களது விவரங்களையும் அல்லது கட்டணங்களையும் செலுத்த வேண்டாம். மேலும் ஏ.ஐ.சி.டி.ஐ தொடர்பான தகவல்களை என்ற www.aicte-india.org அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.