நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும் அதிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி ? விழிப்புடன் எப்படி செயல்படுவது ? என்பது உள்ளிட்ட முக்கியமான கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  

மின்சார பில் மோசடி குறித்து SBI கூறியதாவது, மின்விநியோகம் துண்டிப்பு தொடர்பாக ஒரு சீரற்ற எண்ணில் இருந்து பல பயனர்கள் ஒரு எஸ்எம்எஸ் பெறுகின்றனர். உண்மையான மின்சாரம் துண்டிக்கப்பட்டு விடுமோ என்ற  அச்சம் மற்றும் அவசர உணர்வின் காரணமாக மக்கள் அந்த குறிப்பிட்ட எண்ணை மீண்டும் அழைக்கின்றனர். அழைப்பை ஏற்பவர், தன்னை ஒரு மின்வாரிய அதிகாரி எனக் கூறிக்கொண்டு, தன்னை நம்பும் பொருட்டு பாதிக்கப்பட்டவரை எளிதாக ஏமாற்றும் படி பேசும், 

அந்த மோசடியாளர் உரிய மின்கட்டணத்தை செலுத்துவதற்காக ஒரு ஆப்-ஐ  பதிவிறக்கம் செய்யும்படி பாதிக்கப்படக்கூடிய அந்த நபரிடம் கூறுகிறார். அந்த ஆப் பதிவிறக்கம் செய்யப்பட்டதும் அந்த ஆப்-ஐ சரி பார்ப்பதற்காக அதன் பாஸ்கோடினை பகிரும்படி பாதிக்கப்பட்ட நபரிடம் கேட்கிறார். மேலும் உடனடியாக மின்கட்டண பாக்கியை  செலுத்தும் விதமாக மேலே தொடர சொல்கிறார்.  இந்த மோசடி பற்றி எதுவும் அறியாமல்,

பாதிக்கப்பட்ட அந்த நபர் தன்னை  அறியாமலேயே பதிவிறக்கம் செய்துள்ள ஸ்கிரீன் ஷேரிங் ஆப்பின் உதவியுடன் தங்கள் மொபைல் ஸ்க்ரீன் மோசடி நபரால் பதிவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் பணத்தை செலுத்துகிறார். (அதில் UPI அல்லது ATM -ன் ரகசிய எண், கடவுச்சொல் என அனைத்தும் ரெகார்ட் செய்யப்பட்டு விடும்) பாதிக்கப்பட்ட நபரின் கணக்கை அணுக இந்த முக்கிய தகவல்களை மோசடி நபர்கள் தவறாக பயன்படுத்தி பணம் முழுவதையும் களவாடி விடுகின்றனர். 

எனவே முன்பின் அறிமுகம் இல்லாத எந்த ஒரு நபரின் அறிவுரையின்  படி எந்த ஆப்-யும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். ஏராளமான கேள்வி கேளுங்கள் சந்தேகம் எழும் பட்சத்தில் சிரமம் கொள்ளாமல் சம்மந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கே சென்று உண்மையை அறிந்து கொள்ளுங்கள் என SBI அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இது குறித்து விரிவாக தெரிந்து சொல்ல SBI-ன் அதிகார பூர்வ பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும். 

https://imagescommunications.sbi.co.in/14999669/SBI_Cyber_Security_Booklet_Tamil.pdf