SBI வங்கியின் 1040 காலி பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அதற்கு முதலில் https://sbi.co.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று காலி இடங்கள் பதிவை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு திறக்கும் பக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க என்பதை அழுத்தினால் வரும் புதிய பக்கத்தில் லாகின் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளிட்டு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

புதியவர் என்றால் லாகின் மற்றும் கடவுச்சொல் உருவாக்கி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் எஸ் பி ஐ வங்கியில் பல்வேறு கிளைகளில் 1040 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.