அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களுடைய கடைசி காலத்தில் பணத் தேவையை சமாளிப்பதற்கு ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். அதற்காக பல வங்கிகளில் சிறந்த சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கியின் ரிட்டையர்மெண்ட் பெனிபிட் பண்ட் திட்டம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்த திட்டமானது மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தால் 2022 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது ஒரு வருடம் முடிவடைந்த நிலையில் இந்த பண்டில் மொத்த சொத்தானது 778.69 கோடி மதிப்பாக உள்ளது. அதற்கு சில காரணம் இருக்கின்றன. அதாவது சற்று அதிக சந்தை அபாயங்கள் உடைய திட்டமாக இது இருந்தாலும் இதில் நீண்ட காலமாக முதலீடு செய்தால் நல்ல பென்ஷன் கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் இந்த திட்டத்தில் குறைந்த பட்சம் முதலீடு 500 ஆகும். அதே போல இந்த பண்டிற்கான லாகின் காலம் ஐந்து வருடங்கள். மேலும் இது ஒரு ஆண்டுக்கு சராசரியாக 22.44 சதவீதம் வருட வருமானத்தை கொடுக்கும். மேலும் இதில் வெளியேறும் கட்டணம் எதுவும் கிடையாது.