இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது.  இந்த நிலையில்  சைபர் குற்றவாளிகள் புதுவகையான மோசடியை கையில் எடுத்துள்ளனர். அதன்படி, பயனர்களுக்கு ‘தங்களது SBI கணக்கு முடக்கப்பட்டுவிட்டது.

எனவே கூடுதல் தகவலுக்கு’ என ஒரு லிங்க் அல்லது மொபைல் எண்ணுடன் மெசேஜ் அனுப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து PIBFactCheck விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘இது போலியான செய்தி, இதுபோன்ற மெசேஜ்களை நம்ப வேண்டாம். குறிப்பாக வங்கி விவரம், OTPஐ பகிரக்கூடாது’ என அறிவுறுத்தியுள்ளது.