எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 2000 ப்ரொபஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இதனை https://sbi.co.in/web/careers என்ற இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பாஸ்வேர்டை பதிவிட்டு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். முதல் நிலை எழுத்து தேர்வுகள் நவம்பர் 1 முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை நடைபெறும். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் முதன்மை தேர்வு மற்றும் பிப்ரவரியில் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.