
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய அம்மா சோபாவின் விருப்பத்திற்காக சென்னையில் சாய்பாபா கோவில் ஒன்றினை கட்டியுள்ளார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் கட்டிய சாய்பாபா கோவிலுக்கு அவருடைய தாயார் சோபாவுடன் சேர்ந்து பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் சென்றுள்ளார். அவர் சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ராகவா லாரன்ஸ் சாய்பாபா கோவிலுக்கு சென்றது குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அனைவருக்கும் வணக்கம். நான் இன்று என்னுடைய நண்பர் விஜய் கட்டிய சாய்பாபா கோவிலுக்கு அவருடைய தாயாருடன் சென்றேன். அவர் நான் ராகவேந்திரா கோவிலை கட்டிய போது அங்கு வந்து ஒரு பாடல் பாடினார். இன்று அவருடன் அவர்கள் கட்டிய சாய்பாபா கோவிலுக்கு சென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய நண்பர் விஜய்க்கு இந்த கோவிலை கட்டியதற்காக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் இங்கு தூய்மையான மற்றும் தெய்வீகமான அதிர்வுகளை உணர்ந்தேன். மேலும் இந்த கோவிலுக்கு அனைவரும் வந்து சாமி தரிசனம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Hi everyone, I visited Nanban Vijay’s Sai Baba Temple today along with his mother. When I built My Raghavendra Swamy temple, She sang a song in our temple and graced us with her presence. Today, I’m happy to visit their temple with her. My heartfelt wishes to Nanban Vijay… pic.twitter.com/sZvzFqC0LL
— Raghava Lawrence (@offl_Lawrence) April 13, 2024