
இலங்கைக்கு எதிராக ஐடன் மார்க்ரம் 49 பந்துகளில் சதம் அடித்து ஐசிசி உலகக் கோப்பையில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார்..
2023 உலக கோப்பையில் இன்று 4வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணியில் ராஸ்ஸி வான் டெர் டுசென், குயின்டன் டி காக் மற்றும் ஐடன் மார்க்ரம் ஆகிய பேர் சதமடித்து அடித்து இலங்கையை நிலைகுலைய செய்தனர்.
இதில் டி காக் 84 பந்துகளில் 14 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 100 ரன்களும், ராஸ்ஸி வான் டெர் டுசென் 110 பந்துகளில் (13 பவுண்டரி, 2 சிக்ஸர்) 108 ரன்களும், எய்டன் மார்க்ரம் 54 பந்துகளில் (14 பவுண்டரி, 3 சிக்ஸர்) 106 ரன்களும் எடுத்தனர். மேலும் டேவிட் மில்லர் 21 பந்துகளில் 39 ரன்களும், கிளாஸன் 20 பந்துகளில் 32 ரன்களும் எடுத்து இமாலய இலக்கிற்கு உதவினர்.

இப்போட்டியில் எய்டன் மார்க்ரம் 49 பந்துகளில் சதம் அடித்து 48 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் சாதனை நிகழ்த்தினார். இதுவரையில் உலக கோப்பையில் 2011 உலக கோப்பையில் பெங்களூரில் இங்கிலாந்துக்கு எதிராக அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன் 50 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், மார்க்ரம் 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.. மேலும் உலகக் கோப்பையில் அதிவேக சதம் அடித்த தென்னாப்பிரிக்க வீரர் என்ற ஏபி டி வில்லியர்ஸின் சாதனையையும் மார்க்ரம் முறியடித்தார். ஏபி டி வில்லியர்ஸ் 52 பந்துகளில் சதமடித்துள்ளார்.
வேகமான ஒருநாள் உலகக் கோப்பை நூறுகள் :
49 – தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரம் எதிராக இலங்கை, 2023 இல் டெல்லி
50 – அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன் எதிராக இங்கிலாந்து, 2011 இல் பெங்களூரு
51 – ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் vs இலங்கை, சிட்னி 2015
52 – தென்னாபிரிக்கா ஏபி டி வில்லியர்ஸ் vs வெஸ்ட் இண்டீஸ், சிட்னி 2015
தென்னாப்பிரிக்கா தனது உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் 400 ரன்களைக் கடந்தது, உலகக் கோப்பைப் போட்டியில் அவர்கள் அவ்வாறு செய்வது இது 3வது முறையாகும். தென்னாப்பிரிக்கா 8வது முறையாக ஒருநாள் போட்டிகளில் 400 ரன்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. 48 ஆண்டுகால உலக கோப்பை வரலாற்றில் ஒரே போட்டியில் 3பேர் (வான் டெர் டஸ்ஸன் 108(110), ஐடன் மார்க்ரம் 106(54), டி காக் 100(84)) சதமடித்தது இதுவே முதல்முறை. இதற்கு முன் இரு தரப்பு போட்டிகளில் அடிக்கப்பட்டுள்ளது. ஆனால் உலக கோப்பை வரலாற்றில் அடிக்கப்படவில்லை.. அதேபோல தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் எடுத்தது. இது 48 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். தற்போது கடின இலக்கை நோக்கி களமிறங்கியுள்ளது இலங்கை அணி..
உலகக் கோப்பையில் அதிக 400+ மொத்தங்கள்
தென்னாப்பிரிக்கா – 3*
இந்தியா – 1.
ஆஸ்திரேலியா – 1.
Records broken by South African players today:
– Highest team total in World Cup.
– Fastest hundred in World Cup.
– First team to have 3 hundreds in an innings in World Cup.
– Highest team total in Delhi.They have arrived with a batting fire power in India….!!! pic.twitter.com/9wt68pmkAW
— Johns. (@CricCrazyJohns) October 7, 2023
Rassie – 108 (110).
Aiden Markram – 106 (54).
Quinton De Kock – 100 (84).South Africa 428/5 – the highest ever score and the fastest ever individual hundred in World Cup history. Insane stuff from Proteas!!! pic.twitter.com/M71OOMJETA
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 7, 2023
– Fastest World Cup century.
– First team with 3 centurions in the same innings of a World Cup.
– Highest ever World Cup score.
– 200th individual centuries in World Cup.
– Most times registered 400+ totals in World Cup.South Africa carnage in Delhi….!!! pic.twitter.com/M5Yc2Ptp1m
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 7, 2023