சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த முகமது இத்ரீஸ் என்பவரின் வங்கிக் கணக்கில் தவறாதாக 750 கோடி ரூபாய் கிரெடிட் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மேலும் முகமது இத்ரீஸ் வங்கி கணக்கை கோடக் மகேந்திரா வங்கி முடக்கி வைத்துள்ளதாகவும் தற்போது குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது. அண்மையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து ஆட்டோ ஓட்டுனர் ராஜ்குமார் வங்கி கணக்கில் தவறுதலாக 9 ஆயிரம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இதற்காக பொறுப்பேற்று வங்கியின் உடைய முதன்மை அதிகாரியாக இருக்கக்கூடியவர்  சமீபத்தில் விலகுவதாக அதிகாரப்பூர்வமான தகவலை வங்கி நிர்வாகம் வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக வழக்கு தொடர இருப்பதாகவும் ராஜ்குமார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில் தான் மீண்டும் தேனாம்பேட்டை சேர்ந்த முகமது இத்ரிஸ் என்பவருக்கு 753 கோடி வங்கி கணக்கில் ஏற்றப்பட்டுள்ளது. நேற்று இந்த சம்பவம் நடந்து மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உடனடியாக  அந்த வங்கி கணக்கை முடக்கம் செய்து அந்த பணத்தை திரும்ப எடுக்கக்கூடிய பணியை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அடுத்தடுத்து இது போன்ற சம்பவம் அரங்கேறி வருகின்றது. இதன் பின்னணி என்ன ? வங்கி ஊழியர்களுடைய கவனக்குறைவின் காரணமாக இது போன்ற தவறுகள் நடைபெறுகிறதா ? இல்லை வேற எதுவும் திட்டமிட்டு வங்கியை நிர்வாகம் முறைகேடுகளில் ஈடுபடுவதவதா ? என சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது.எனவே இனி வரக்கூடிய காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்கும் பட்சத்தில் சரியான முறையை கையாள வேண்டும் என எதிர்பார்ப்பாக இருக்கிறது.