இந்தியாவின் UPI (ஐக்கிய பரிவர்த்தனை இடைமுகம்) பரிவர்த்தனைகள் 2023-24 நிதியாண்டில் மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் தகவலின்படி, 2017-18ஆம் ஆண்டில் 1 லட்சம் கோடியாக இருந்த பரிவர்த்தனைத் தொகை, தற்போதைய நிதியாண்டில் 200 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது மொத்தம் 138% வளர்ச்சியை அடைந்துள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதங்களின் இடையே மட்டும் UPIயில் 8,659 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இதில், மொத்தமாக 1,669 கோடி மதிப்புடைய பரிவர்த்தனைகள் நிகழ்ந்துள்ளதாகவும், மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த வளர்ச்சி நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் அதிகரிப்பின் முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் தரவுகள், UPI பயனர்களின் எண்ணிக்கையும் பரிவர்த்தனை அளவுகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காட்டுகின்றன. இந்த வளர்ச்சி, இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பங்குகள் வருங்காலத்திலும் பெருகும் என நம்பப்படுகிறது.