வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்த சூழ்நிலையில், இப்போது ரிசர்வ் வங்கியானது (RBI) மக்களுக்கு ஒரு முக்கிய செய்தியை வழங்கி உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் இருமாத நாணயக்கொள்கை மதிப்பாய்வில் (எம்பிசி) ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கியானது எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. RBIன் ரெப்போ ரேட் 6.5% ஆக தொடருமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், “ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாகவே வைத்திருக்க பணவியல் கொள்கைக்குழு ஒருமனதாக முடிவுசெய்திருக்கிறது. பொருளாதாரத்தின் வளர்ச்சியை தொடர ரெப்போ விகிதமானது முந்தைய நிலையிலேயே தக்கவைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடவடிக்கை மேற்கொள்போம்” என்று கூறினார். வங்கி மற்றும் என்பிஎப்சி நிதியமைப்பு வலுவாகவே இருக்கிறது என RBI கவர்னர் தெரிவித்தார்.