திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த 17, 18 -ஆம் தேதி ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அதிக பாதிப்பு உள்ள இடங்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், குறைந்த பாதிப்புள்ள இடங்களுக்கு 1000 ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாமிரபரணி நதிக்கரை வட்டங்களான அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய வட்டங்களில் வசிக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கும் பணி தொடங்கியது. நேற்று காலை முதல் நிவாரணத் தொகை வழங்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் நெல்லை மாநகரத்திற்கு உட்பட்ட மீனாட்சிபுரம், சி.என்.கிராமம் ஆகிய பகுதிகளில் இருக்கும் கடைகளில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.