ஆர்சிபி அணி புதிய ஜெர்ஸியும், பெயர் மற்றும் லோகோவை மாற்றம் செய்துள்ளது..

ஐபிஎல் 2024 தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது, மார்ச் 22ஆம் தேதி சீசனின் முதல் ஆட்டத்தில் விராட் கோலியின் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் எம்எஸ் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆனால் அதற்கு முன் ஆர்சிபி சேனலில் தனது புதிய ஜெர்சியை வெளியிட்டுள்ளது. 2024 ஆர்சிபி அன்பாக்ஸ் (RCB Unbox) நிகழ்சி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.  இதில் ஆர்சிபி அணிக்கு புதிய ஜெர்ஸியும், பெயர் மற்றும் லோகோ மாற்றப்பட்டுள்ளது. அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்’ என்பதற்கு பதிலாக ‘ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சீசனைப் பற்றி பேசினால், ஆர்சிபியின் ஜெர்சி முன்பு போல் சிவப்பு நிறத்தில் உள்ளது, ஆனால் இந்த முறை டி-ஷர்ட்டின் மேல் பகுதியில் கருப்புக்கு பதிலாக அடர் நீலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஜெர்சி அறிமுகம் செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஆர்சிபி இன் அதிகாரப்பூர்வ இணையதளம் செயலிழந்து, சிவப்பு மற்றும் நீல நிறங்களின் கலவையால் செய்யப்பட்ட ஜெர்சி பல மணிநேரங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் கசிந்தது. நார்வேஜியன் இசைக்கலைஞர் ஆலன் வாக்கரும் ஆர்சிபி ஜெர்சி வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார், அவருக்கு விராட் கோலி மற்றும் ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோர் ஆலன் வாக்கரின் பெயர் அச்சிடப்பட்ட ஆர்சிபி டி-சர்ட்டை பரிசளித்தனர்.

இதற்கிடையில், முழு ஆர்சிபி அணியும், பயிற்சியாளர் மற்றும் துணை ஊழியர்களும் மேடையில் இருந்தனர். இம்முறையும் ஆர்சிபியின் டைட்டில் ஸ்பான்சர் ‘கத்தார் ஏர்வேஸ்’ என்று அணியின் ஜெர்சியில் பெரிய வார்த்தைகளில் ‘கத்தார் ஏர்வேஸ்’ என்று எழுதப்பட்டுள்ளது.

ஆர்சிபி மகளிர் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும் மேடையில் இருந்தார் :

ஜெர்சியை வெளியிடுவதற்கு முன், விராட் கோலி ஆர்சிபி மகளிர் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனாவை மேடையில் அழைத்தார். விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகிய மூவரும் ஒன்றாக பட்டனை அழுத்தினர், அதன் பிறகு வீடியோ தொடங்கியது, அதில் விராட் கோலி மற்றும் அணியின் மற்ற வீரர்கள் புதிய ஜெர்சியில் போஸ் கொடுத்தது. சில நாட்களுக்கு முன்பு, ஸ்மிருதி தனது கேப்டன்சியின் கீழ் முதல் முறையாக மகளிர் ஆர்சிபி அணியை சாம்பியனாக்கியது தெரிந்ததே. மகளிர் ஐபிஎல் 2024 இன் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸை அவரது அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு, முழுமையான ஐபிஎல் அட்டவணை இன்னும் வெளியாகவில்லை. ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் முதல் 17 நாட்களுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் விரைவில் முழு அட்டவணை வெளியிடப்படும்..