
மே 18 நடைபெற்ற ஆர்சிபி vs சிஎஸ்கே போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்து play off நுழையும் வாய்ப்பை தவறவிட்டது. இந்த வெற்றியை RCB ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடி தீர்க்க, மற்றொருபுறம் சிஎஸ்கே ரசிகர்கள் தோல்வியை கண்டு வருத்தத்தில் உள்ளனர். போட்டி குறித்து பல்வேறு வீடியோ க்ளிப்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வர தற்போது தோனி குறித்த அவதூறு பரப்பும் வகையில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் , எப்போதும் போட்டி முடிந்த பிறகு வெற்றி பெற்ற வீரர்களுடன் எதிரணியில் இருப்பவர்கள் கைகுலுக்கி செல்வது வழக்கம். அ
வகையில், நேற்றைய தினம் போட்டி முடிந்தவுடன் சிஎஸ்கே அணி வீரர்கள் வரிசையாக நின்று rcb வீரர்களுக்கு கைகுலுக்க தயாராக நின்றனர். அதில், முதல் நபராக எம் எஸ் தோனி நின்றிருந்தார். ஆனால் ஆர் சி பி வீரர்கள் வெற்றி களிப்பில் மிகுந்த உற்சாகத்துடன் சுற்றி திரியவே தாமதம் செய்த காரணத்தினால் எம் எஸ் தோனி சட்டென்று பின்வாங்கி கிரவுண்டிற்கு வெளியே இருக்கும் ஆர்சிபி வீரர்களிடம் கை குலுக்கி பெவிலியனுக்கு சென்றார். இது விளையாட்டு நெறிமுறைக்கு எதிரானது என பலரும் குற்றம் சாட்டி வந்த நிலையில், பல கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ஆர்சிபி ரசிகர்களும் கூட தவறு என்பது RCB பக்கம் தான் உள்ளது. வெற்றி களிப்பில் வெகு நேரம் CSK அணி வீரர்களை காக்க வைத்து விட்டனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.