
டி20 தொடரான ஐபிஎல் தொடரின் 18 ஆவது சீசன் நேற்று தொடங்கியது. ஈடன் கார்டன் மைதானத்தில் அரங்கேறும் தொடங்கிய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெங்களூர் சேலஞ்சர்ஸ் அணியை சந்தித்தது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டதில், டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் ரஜத் படிதார் பந்து வீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் ஆடிய கொல்கத்தா 20 ஓவர் 8விக்கெட் இழப்புக்கு 170 சேர்த்தது. அதன் பிறகு ஆடிய பெங்களூர் அணி 16.2 ஓவரில் மூன்று விக்கெட் இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதில் KKR அணியின் தோல்விக்கு இந்த மூன்று முக்கிய காரணங்கள் தன என்று கூறப்படுகிறது. அதாவது கேகேஆர் அணி 10 ஓவர்கள் முடிவில் 107/ 2 என்ற நல்ல ஒரு நிலையில் தான் இருந்தது. ஆனால் பார்ட்னர்ஷிக் அமைக்காமல் விக்கெட்டுகளை இழந்தது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடைசி ஓவர்களில் 4, 6, 4, 10, 4, 5 போன்ற சொற்ப ரன்கள்தான் அடித்தார்கள். கடைசி ஆறு ஓவர்களின் 33 ரன்கள் தான் எடுத்தார்கள். பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.இதுவும் ஒரு காரணம்.
அதேபோல கடைசி ஓவரில் பேட்டிங் செய்ய ஆரம்பித்தபோது பனியின் தாக்கம் ஏற்பட ஆரம்பித்தது. மேலும் ஸ்கொரும் குறைவாக இருந்தது. இதனால் பனியின் தாக்கத்தை சமாளித்து பவுலர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதுதான் இந்த அணி செய்த மூன்று முக்கிய தவறுகள்.