இந்த வருடம் வருகின்ற 18ஆம் தேதி சனிக்கிழமை மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்  இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் ராமநாதசுவாமி மற்றும் பருவதவர்ணி அம்பாள் அருள் பாலித்து வருகின்றனர்.

இக்கோவிலில் இன்று மாசி மகா சிவராத்திரி திருவிழாவில் கொடியேற்ற நிகழ்வு சிவன் சன்னிதானம் முன்பு உள்ள கொடி மரத்தில் வேதாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க மேள வாத்தியங்களுடன் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. 8 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சிவராத்திரி நாளான பிப்ரவரி 18ஆம் தேதி இரவு ராமநாதசுவாமி மற்றும் பருவத வர்தினி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாரதனைகள் நடைபெற உள்ளது.

இன்று கோவில் நந்தி மண்டபம் முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்வில் திருக்கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபட்டு சென்றனர்.