ஆசியாவிலேயே நம்பர் 2 நடிகராக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தென்னிந்திய திரை உலகின் மிகப்பெரிய கதாநாயகன் ஆனால் அவர் குறித்து சமீபத்தில் சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது சிவாஜி பட வெற்றிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த் பெங்களூருவில் உள்ள ஒரு கோவிலுக்கு பிச்சைக்காரன் வேடம் அணிந்து சென்றுள்ளார். அதனைப் பார்த்த மார்வாடிப் பெண் ஒருவர் பாவம் என நினைத்து ரூபாய் 10 பிச்சையாக போட்டுள்ளார்.

தன்னிடம் உள்ள பணத்திற்கு அளவே இல்லை என்ற போதிலும், அதனை எளிமையாக மனதார ரஜினிகாந்த் வாங்கியுள்ளார். பிறகு நடந்து சென்று கோவில் உண்டியலில் 100 ரூபாயை எடுத்து போட்டுள்ளார்.

இதை கவனித்த அந்த மார்வாடி பெண் நடிகர் ரஜினிகாந்தை தடுத்து வேகமாக சென்று மன்னிப்பு கேட்டுள்ளார். உடனே பத்து ரூபாயை கொடுத்து விடுமாறும் கேட்டுள்ளார்.

இருப்பினும் ரஜினிகாந்த் அதனை கொடுக்க மறுத்து விட்டு, ஒவ்வொரு முறையும் நீ ஒன்றும் இல்லாத பிச்சைக்காரன் தான் என ஆண்டவன் எனக்கு உணர்த்தி வருகிறான்.

அந்த நாடகத்தில் நீங்கள் ஒரு கருவி அவ்வளவுதான் என புன்னகையுடன் கூறிவிட்டு அந்தப் பெண்ணிற்கு நன்றி சொல்லிவிட்டு காரில் ஏறி புறப்பட்டு உள்ளார். இந்த பழைய சம்பவம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.