கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது. தற்போது கோடை சீசன் முன்னிட்டு மலை ரயிலில் பயணம் செய்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் கூட்டம் காரணமாக டிக்கெட் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே தெற்கு ரயில்வே நிர்வாகம் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே கோடை கால சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்படுவதாக அறிவித்தது.

நேற்று காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறப்பு மலை ரயில் ஊட்டிக்கு இயக்கப்பட்டது. இந்நிலையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி சிறப்பு ரயில் ஜூன் மாதம் 24-ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில், மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே வருகிற ஜூன் மாதம் 25-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.