சிதம்பரம் தமிழக காங்கிரஸ் பதவியை ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னார். உங்களுக்கு மாநில தலைவர் பதவி கொடுத்தால்  ஏத்துப்பீங்களா என்ற கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர் எம்.பி,

யாராவது பதவி  கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்வாங்க. அது கார்த்திகா இருந்தா என்ன ? நானா இருந்தா சிதம்பரமா இருந்தா என்ன ? தங்கபாலோ, இளங்கோவனோ….   யாரா இருந்தாலும் என்ன ?  கட்சியில இருக்க கூடிய முக்கியஸ்தர்கள் நிறைய பேர் இருக்கிறாங்க.  நிறைய பேர் கேட்குறாங்க,  விரும்புறாங்க…

ஒரு மாநில தலைவரா இருந்து செயல்படுவது என்பது ஒரு கட்சியில…. மாநிலத்துக்கு அதுதான் ஒரு முக்கியமான போஸ்ட்…  அது தான் பெரிய போஸ்ட்…. அந்த பெரிய போஸ்ட்ல  தலைவரா இருந்து செயல்படுவது…  காங்கிரஸ் தலைவர் ராமையா இருந்திருக்காங்க… கக்கன் இருந்திருக்கிறார்… காமராஜர் எல்லாம் பல வருஷம் வந்திருக்காரு….

தலைவர்கள் என்பது ஒரு கௌரவமான ஒரு பதவி, ஒரு பொறுப்பு. செயல்படுவதற்கு ஒரு  வாய்ப்பு..  அதனால அந்த வாய்ப்பில் யாருக்கு கிடைத்தாலும் சந்தோசமா தான் பார்ப்பார்கள்… மாநில தலைவர் பதவியை கேட்பதற்கு என்ன இருக்கின்றது ?   எனக்கு கொடு… உனக்கு கொடு.. என்று கேட்கிறது எல்லாம் கிடையாது…  அது அவங்களுக்கு தெரியும்…

காங்கிரஸ் கட்சி கேக்குறதுனாலயே கிடைக்காது.. அதனால மாநில தலைவர் பொறுப்பு கேட்டவுங்களுக்கு தான் கொடுப்பாங்க… தட்டினவங்களுக்கு தான் கொடுப்பாங்கன்னு கிடையாது.  தலைமைக்கு தெரியும்…  மாநில தலைவராக போடும் போது பல்வேறு ரொட்டேஷன்…. பல்வேறு ஆலோசனைகள் பண்ணி  போடுவாங்க….  ஒரு ஆல் இந்தியா பாட்டில் எந்த மாநிலம் என வைப்பாங்க…  ஏரியா செல்வாக்கு…. சமுதாய செல்வாக்கு… இந்த மாதிரி மாநிலத்துக்கு மாநிலம் பார்த்து நிர்வாகிகளை போடுவாங்க.

தமிழ்நாட்டில் ஏற்கனவே யார் யார் இருந்திருக்கா ? இப்ப யாரை போடணும் ? அவங்கள திருப்பி போடணுமா ? புதுசா போடணுமா ? மிடில் ஏஜ்ல  போடணுமா ? அல்லது எக்ஸ்பீரியன்ஸ் ஆளை  போடணுமா ?  யங்ஸ்டரை போடணுமா ? என பல்வேறு ஆலோசனை செய்து தலைமை போடுவாங்க. போடும்போது உங்களுக்கெல்லாம் தெரியும்.  பிஜேபில பொன் ராதாகிருஷ்ணன் வந்திருக்காரு… சி.பி ராதாகிருஷ்ணன் இருக்கிறார்.

இப்போ இளைஞருக்கு  ஒரு சான்ஸ் கொடுத்து இருக்காங்க ?  ராகுல் காந்தி இளைஞர் தான்.. அகில இந்திய தலைவராக இருக்காரு. அவரு தான் NO 1 கட்சியில்… அதனால் தமிழக காங்கிரஸில் இளைஞரை தலைவராக போடுவதற்கு  காங்கிரஸ் மத்திய தலைமை கருதினால் போடுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.  இளைஞரை போட்டாலும் சரி,  இல்லை எக்ஸ்பீரியன்ஸ் ஆட்களை போட்டாலும் சரி,  யாரை போட்டாலும் எல்லாரும் இணைந்து செயல்படுவோம் என தெரிவித்தார்.