காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.’

இந்நிலையில் ராகுல் காந்தி மீதான நடவடிக்கை முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் எம்பிக்கு கூட கருத்து சொல்லும் ஜனநாயக உரிமை இல்லை என மிரட்டும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் மக்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கமே இதற்கு காரணம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.