காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டு கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ராகுல்காந்தி தற்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இதனால் ராகுல் காந்தி இனி 8 ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது.  இந்திய சட்ட விதிகளின்படி சிறை தண்டனை முடித்து 6 ஆண்டுகளுக்கு குற்றவாளி எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது. அதனடிப்படையில் மொத்தம் 8 ஆண்டுகள் ராகுலுக்கு தடை ஏற்பட்டிருக்கிறது.இந்நிலையில் ராகுல் காந்தி மீதான தகுதி நீக்க நடவடிக்கையை உடனே திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று குறிப்பிட்டு இருக்கும் முதல் பஸ் ஸ்டாலின், அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து இதனை எதிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனம் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.