அமெரிக்காவின் நியூயார்க் நகரம் ஹார்லெமில், ‘Live Action’ என்ற உயிர் பாதுகாப்பு அமைப்பில், செய்தியாளராக பணியாற்றிய 23 வயதுடைய சவன்னா கிரேவன் அன்டாவ், தெருவோர மக்களிடம் கருத்துக்கணிப்பு செய்தபோது திடீரென தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘Planned Parenthood’ மற்றும் கருக்கலைப்பு தொடர்பான கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்த சவன்னாவை, ஆரம்பத்தில் அமைதியாக பேசிவந்த பெண் ஒருவர், சவன்னா கருக்கலைப்புக்கு எதிரான ஆதரவு குழு என தெரிந்ததும் முகத்தில் பல முறை குத்தியதாக காணப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Live Action (@liveactionorg)

இதில் சவன்னா முகத்தில் இரத்தம் கொட்டிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தையல் போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதும், மக்கள் வருத்தம் மற்றும் கோபம் தெரிவித்து வருகின்றனர். “இந்த மாதிரி முக்கியமான விவாதத்தில் வன்முறைக்கு இடமில்லை,” “அவர் கைது செய்யப்பட்டாரா?” என பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Live Action அமைப்பின் நிறுவனர் லைலா ரோஸ், தாக்குதலுக்குப் பிறகும் அடுத்த நாளே சவன்னா ஒரு உயிர்காக்கும் பேரணியில் பங்கேற்றதை புகழ்ந்து, அற்புதமான தைரியம் என தெரிவித்துள்ளார். தற்போது தாக்கிய பெண் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.