இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் t20 தொடர் முடிவடைந்த நிலையில், நேற்று ஒரு நாள் தொடர் தொடங்கியது. இதில் டாஸை வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பென் டக்கட்டும், பிலிப் சாலட்டும் நிதானமான ஆட்டத்தை தொடங்கினர். 8 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் எடுத்தனர். ஒன்பதாவது ஓவரில் பிலிப் சால்ட் 43 ரன்களில் ஆட்டத்தை இழந்து வெளியேற்றப்பட்டார்.

அதன் பின் 10-வது ஓவரில் பென் டக்கட்டும், ஹாரி ப்ரூக்கும் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர். 8 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அடுத்து 10வது ஓவரில் 39 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நிதானமாக ஆடிய பட்லெர் தனது 27 வது ஒருநாள் அரை சதத்தினைப் பதிவு செய்தார். லிவ்விங்ஸ்டனை வெளியேற்றியதன் மூலம் ஹர்ஷித் ரானா புதிய சாதனைபடைத்தார். 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 248 ரன்கள் எடுத்தது.

சிறப்பாக பந்துவீசி இந்திய அணியில் ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா தலா 3 விக்கெடுகளை வீழ்த்தினர். போட்டி முடிந்த பிறகு பேசிய ஹர்ஷித் ராணா கூறியதாவது, இது என்னுடைய கனவு  நான் இதற்காக என்னை தயாரித்துக் கொள்ள கடினமான தளங்களிலும் பயிற்சி செய்தேன். இங்கு போட்டியில் நான் முதலில் சரியான லெந்துகளில் பந்தை வீசவில்லை. அதை சரி செய்தவுடன் விக்கெட்டுகளை பெற்றேன் என்று தெரிவித்துள்ளார்.