
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய கடைசி திரைப்படமாகும்.
இந்த திரைப்படத்தில் பாபிதியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமீதா பைஜூ போன்ற பலர் முக்கிய இடங்களில் நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்தினை இயக்குனர் எச் வினோத் இயக்கும் நிலையில், அனிருத் இசையமைக்கிறார். இது நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஜனவரி 9ம் தேதி, அதாவது அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையின் போது ஜனநாயகன்ப படம் ரிலீஸ் ஆகும் நிலையில் இன்னும் 20 நாட்களில் ஷூட்டிங் முடிவடையும் என்று கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.