உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சட்டசபையில் எம்.எல்.ஏ-க்கள் சிலர் பான் மசாலாவை சாப்பிட்டுவிட்டு எச்சில் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சபாநாயகர் சதீஷ் மஹானா சட்டசபைக்குள் நுழைந்தார். அப்போது அங்கிருந்த பான் மசாலா கறைகளை கண்டு அவர்  அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அதை சுத்தம் செய்ய வேண்டும் என்றும், இது போன்ற செயல்களில் யாரேனும் எடுப்பட்டால் அதை எம்.எல்.ஏ-க்கள் தடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். மேலும் இதனை செய்த எம்.எல்.ஏ தானாகவே முன்வந்து ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் அம்மாநில சட்டசபைக்குள் பான் மசாலா போன்றவற்றை பயன்படுத்த கூடாது என்று சபாநாயகர் உத்தரவிட்டார். இது தொடர்பாக சட்டசபையில் கேள்வி நேரத்திற்கு பிறகு, பேசிய சபாநாயகர் சட்டசபை வளாகத்திற்குள் ஊழியர்கள், அதிகாரிகள் அல்லது வேறு எந்த தனி நபர்கள் போன்ற யாரும் குட்கா, பான் மசாலா போன்றவற்றை உட்கொள்வதை கண்டறிந்தால் அவர்களுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும். அதோடு விதிகளின்படி அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.