5 பவுன் தங்க நகைகளை தொலைத்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவி மற்றும் அவரின் தாயார் நகைகளை ஒப்படைத்ததால் போலீசார் பாராட்டு தெரிவித்தார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கேடிசி நகரை சேர்ந்த செல்வராணி என்பவர் ஒட்டப்பிடாரத்தில் இருக்கும் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை செய்து வருகின்றார். சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பாக செல்வராணி பள்ளியில் பணி புரியும் ரமணா என்ற ஆசிரியருடன் இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடிக்கு சென்ற போது செல்போனில் பேசிக்கொண்டே சென்றிருக்கின்றார்.

இந்நிலையில் புதியம்புத்தூரில் வந்த போது அவரின் கையில் இருந்த கைப்பை காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதன்பின் அவர்கள் வந்த சாலையில் மீண்டும் தேடிப் பார்த்துள்ளார்கள். இருப்பினும் நகை பை காணவில்லை. இது பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் முத்துச்செல்வி என்பவர் அவரின் வீட்டிற்கு நடந்து சென்றபோது வழியில் கை பை ஒன்று கீழே கிடந்துள்ளது. அதை எடுத்து பார்த்தபோது நகை இருந்தது தெரிய வந்தது. இதன் பின் அவர் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று போலீஸிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது அவரின் மகள் மதிஷாவர்த்தினி தனது பள்ளியின் தலைமை ஆசிரியை கைப்பையை தொலைத்து விட்டதாக தெரிவித்தார்.

இதன் பின் முத்துலட்சுமி தலைமையாசிரியரிடம் தகவல் கொடுத்து நகை பையை போலீசாரிடம் ஒப்படைத்திருப்பதாக தெரிவித்தார். தலைமை ஆசிரியர் காவல் நிலையத்திற்கு சென்று நகையை பெற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து நகைகளை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த முத்துலட்சுமியையும் அவரின் மகளையும் போலீசார் பாராட்டி 2000 ரூபாய் பரிசு வழங்கி கௌரவித்தார்கள்.