அனைத்து வகை சேமிப்பு திட்டங்களின் முதலீட்டாளர்களை ஆன்லைன் மோசடி ஆபத்திலிருந்து பாதுகாக்கவும், முதலீட்டாளர்களின் நிதி கண்காணிப்புக்காகவும் சேமிப்பு திட்டங்களின் கணக்குகளை ஆதார் கார்டுடன் இணைப்பதை மத்திய அரசானது கட்டாயமாக்கி இருக்கிறது.

இத்தேவை பொது வருங்கால வைப்பு நிதி(PPF) முதலீட்டாளர்களுக்கும் இருக்கிறது. இந்நிலையில்  PPF முதலீட்டாளர்கள் வருகிற ஜூன் 30-ம் தேதிக்குள் தங்களது கணக்கை ஆதாருடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களின் கணக்கு முடக்கப்படலாம் மற்றும் கணக்கின் பரிவர்த்தனைகள் நிறுத்தப்படலாம் என்று சொல்லப்படுகிறது.