நடப்பு மாதத்தில் 2 மாதங்களுக்கு ரேஷன் விநியோகம் செய்ய ஹரியானா அரசானது முடிவுசெய்துள்ளது. இந்த ரேஷன் 2 வெவ்வேறான தேதிகளில் அரசு மலிவு தானிய கடையிலிருந்து விநியோகம் செய்யப்படும். ஹரியானா அரசு சார்பாக அம்மாநிலத்தை சேர்ந்த 31 லட்சத்து 87 ஆயிரத்து 107 கார்டுதாரர்களுக்கு மே மாதம் இரண்டு முறை சர்க்கரை, கோதுமை, அரிசி வழங்கப்படும்.

இந்த ரேஷனானது ஏப்ரல் மற்றும் மே ஆகிய 2 மாதங்களுக்கும் சேர்த்து வழங்கப்படும். இந்நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் விநியோகம் இப்போது ரேஷன் டிப்போக்கள் வாயிலாக செய்யப்பட்டு வருகிறது. அதன்பிறகு மே மாத ரேஷன் விநியோகமானது வரும் 20ம் தேதி தொடங்கும் என கூறப்படுகிறது.