மக்கள் மத்தியில் நீண்டகால சேமிப்பை ஊக்குப்படுத்தும் நோக்கில் வரிசலுகைகளோடு கூடிய பல்வேறு அஞ்சல்துறைத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. சிறந்த முறையில் எதிர்காலத்துக்கான சேமிப்பு திட்டங்களை வரிவிலக்குகளுடன் போஸ்ட் ஆபிஸ் வழங்குகிறது. அதுகுறித்து நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

பொது வருங்கால வைப்புநிதி(PPF)

PPF எனப்படும் பொது வருங்கால வைப்புநிதி திட்டத்தில் மெச்சூரிட்டியின்போது டெபாசிட் செய்யும் முதலீட்டாளர்களுக்கு வட்டி உடன் சேர்த்து நிதி பலன்களை தருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தற்போதைய வருடாந்திர வட்டிவிகிதம் 7.1 சதவீதம் ஆகும். கூடுதலாக இத்திட்டம் 3 மடங்கு வரிசலுகையை வழங்குகிறது. IT சட்டத்தின் 80-C பிரிவுக்கு இணங்க இத்திட்டத்தில் ஒருவர் அதிகபட்சம் ஒரு வருடத்தில் PPFல் முதலீடு செய்யக்கூடிய தொகை ரூ.1.5 லட்சம் ஆகும்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா(SSY)

இந்த திட்டத்துக்கான அஞ்சல் கணக்கை 10 வயதுக்கும் குறைவான பெண் குழந்தையின் பெயரில் திறக்கலாம். இத்திட்டத்தின் கீழ் இப்போது வழங்கப்படும் வட்டி விகிதமானது 7.6 சதவீதம் ஆகும். இந்த திட்டத்தில் சேருவதற்கு குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத் தொகை ரூபாய்.250 மற்றும் ஒவ்வொரு நிதி ஆண்டும் அதிகபட்சம் ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டக் கணக்கில் செலுத்தப்படும் எந்த தொகைக்கும், ஐடி சட்டம் 1961 80C-ன் கீழ் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.