
அமெரிக்காவில் கலிபோர்னியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி ஒலிவியா இசபெல் ரோட்ரிகோ. இவர் யூட்யூபில் 1.5 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை வைத்துள்ளார். இவரது பாடல்கள் யூட்யூபில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த இசை நிகழ்ச்சிக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர்.
இதில் மிக அழகான ஆடையோடு மேடையில் நடனமாடியபடி பாடல் ஒன்றை பாடினார். அப்பொழுது மேடையை சுற்றி வந்து பாடிய பொழுது திடீரென மேடையில் உள்ள பள்ளத்தில் விழுந்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் கத்தி கூச்சலிட்டனர்.ஒலிவியா ரோட்ரிகோ சட்டென்று சுதாரித்து மேடையின் மேலே எழுந்து மீண்டும் தனது இசை கச்சேரியை தொடங்கினார். இந்த காட்சி வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
— Pop Base (@PopBase) October 14, 2024