தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் வருகிற 15-ஆம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் வைப்பதன் சிறப்பு முக்கியத்துவம் பற்றி உங்களுக்கு தெரியுமா? தமிழ்நாட்டில் அனைவராலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பொங்கல் தை மாதத்தில் வருவதால் தைப்பொங்கல், பெரும் பொங்கல், சூரிய பொங்கல், அறுவடை திருநாள் என அழைக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் வீட்டை சுத்தம் செய்து பழைய பொருட்களை அப்புறப்படுத்துவது வழக்கம். பழையன கழிதல் புதியன புகுதல் என்று புதிய வாழ்க்கை மாற்றங்களை வரவேற்கும் விதமாக போகி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இதனையடுத்து பொங்கல் திருநாள் அன்று வீட்டை அலங்கரித்து வண்ண வண்ண கோலங்களை போடுவார்கள். அன்றைய தினம் அறுவடை செய்த அரிசி, புதிய பானை, வெல்லம் ஆகியவற்றை வைத்து சூரிய பகவானை வழிபட்டு பொங்கல் வைப்பார்கள். முகூர்த்த நேரத்தில் பொங்கல் வைப்பது மிகவும் நல்லது. ஜனவரி 15-ஆம் தேதி திங்கட்கிழமை தைப்பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை பொங்கல் வைக்கலாம். அந்த நேரத்தை தவறவிட்டால் காலை 9.30 மணி முதல் 10:30 மணி வரை பொங்கல் வைத்து வழிபடுவதற்கு மிகவும் நல்ல நேரம். இதேபோல காலை 7:30 மணி முதல் 9 மணி வரை ராகு காலம் என்பதால் பொங்கல் வைக்க கூடாது. நல்ல நேரத்தில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டு பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும்.