கன்னி ராசி, தர்ம பிரபு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய முத்து குமரன் தற்போது சலூன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, யோகி பாபு, நயன் கரிஷ்மா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றார்கள். சாம் இசையமைத்து இருக்கின்றார். இந்த நிலையில் படம் குறித்து இயக்குனர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளதாவது, வெள்ளைக்காரன் காலத்தில்  பார்பராக இருந்த ஐயங்காளை அந்த காலத்தில் அவர் நினைத்த காரியங்களை செய்ய முடியவில்லை.

அதனை பல வருஷத்துக்கு பிறகு அவருடைய பேரன் காளி எப்படி நிறைவேற்றுகின்றார் என்பதே கதையாகும். இந்த படத்தில் தாத்தா மற்றும் மற்றும் பேரன் என இரண்டு கதாபாத்திரத்திலுமே மிர்ச்சி சிவா நடித்திருக்கின்றார். தாத்தா வேடத்தில் இருக்கும் மிர்ச்சி சிவா சீரியஸாகவும் பேரனாக இருக்கும் மிர்ச்சி சிவா நகைச்சுவையாகவும் நடித்துள்ளார்.

மேலும் சுருளி என்ற கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்திருக்கின்றார். மேலும் ஹீரோயின் அரசியல் கட்சி தலைவரின் மகளாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் அரசியலை கிண்டல் செய்யும் படமாகும். இதனால் பின்னால் வம்பு எதுவும் வரக்கூடாது என்பதற்காக பொதிகை மலை நாடு என்ற கற்பனை நாட்டை உருவாக்கி அங்கு நடப்பதாக காட்டி இருப்பதாக தெரிவித்துள்ளார்.