விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தெளி கிராமத்தில் ஆரோக்கிய வெனிசுலா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெனிசுலாவுக்கும் ஜெனித் அகஸ்டின் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 50 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கூடுதலாக தர வேண்டும் எனக் கூறி ஜெனித் அகஸ்டின் தனது மனைவியை அடித்து சித்திரவதை செய்துள்ளார்.
மேலும் உறவினர்களான ரீட்டா, ஜான் ஜோசப், புஷ்பராணி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து ஆரோக்கிய வெனிசுலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் ஜெனித் அகஸ்டின் உள்பட 4 பேர் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.